யுபிஐ மூலம் கல்விக்கட்டணங்களை செலுத்தும் முறையை ஊக்குவிக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கும், என்.சி.இ.ஆர்.டி, சிபிஎஸ்சி உள்ளிட்ட அமைப்புகளுக்கும் ஒன்றிய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், யுபிஐ, மொபைல் வாலெட், நெட் பாங்கிங் போன்ற டிஜிட்டல் கட்டணத் தளங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் யுபிஐ மூலம் கல்விக்கட்டணங்களை செலுத்தும் முறையை ஊக்குவிக்க அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம், கல்விக் கட்டணம் செலுத்தும் முறையில் வெளிப்படைத் தன்மை ஏற்படும், பெற்றோர்களும் வீட்டில் இருந்தே எளிதாக கட்டணங்களை செலுத்தும் வசதியும் பெறுவர் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.