india

img

பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு - தாலிபான்களுக்கு துணை போகும் ஒன்றிய அரசு!

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முட்டாகி அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்த பெண் நிருபர்கள் வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்கள் எந்த நிபந்தனையுமின்றி உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சி தலைவர்கள், பெண்ணியவாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகிறனர்.
தாலிபான்களின் நிலைப்பாட்டிற்கு ஒன்றிய அரசு துணை போகிறதா? என்றும் பெண் ஊடகவியலாளர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க அவர்கள் யார்? என்றும், பலரும் கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். 
இதுகுறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிசித்துள்ளார்.