அதானிக்காக வளைக்கப்படும் சுற்றுச்சூழல் விதிமுறைகள்
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியில் அதானி நிறுவனம் ஆண்டுக்கு 60 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஆலையை தொடங்குகிறது. இந்த ஆலை தொடங்கப் பட்டால் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தகைய சூழலில், ஒன்றிய அரசு சிமெண்ட் ஆலைக்கு சுற்றுச் சூழல் விலக்கு அளிக்கும் வகையில் புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது மோடி யின் நண்பர் அதானிக்காக வெளியிடப்பட்ட தளர்த்தப்பட்ட விதிமுறைகள் என்பதில் எள்ளள வும் சந்தேகமில்லை.
ஆலை அமைய உள்ள இடம் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். முன்மொ ழியப்பட்ட ஆலையின் 10 கிமீ சுற்றளவில் 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3.5 லட்சம் குடும் பங்களைச் சேர்ந்த 14.8 லட்சம் மக்கள் வசிக்கின்ற னர். ஆலையின் 1.15 கிமீ சுற்றளவில் நான்கு பள்ளிகள் உள்ளன. சிமெண்ட் ஆலையால் சுற்றுப்புறத்தில் காற்று, நிலம் மற்றும் தண்ணீர் மாச டைந்துவிடும் என்ற அந்த மக்களின் அச்சம் நியாயமானதே. எனவே அந்த மக்களின் ஒப்புதல் இல்லாமல் அங்கு ஆலை அமைக்கக்கூடாது. விசாகப்பட்டினத்திலுள்ள கங்காவரம் துறை முகத்திற்கு அருகில் இதேபோன்ற ஆலையை உருவாக்கும் திட்டத்தையும் அதானி குழுமம் அறி வித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்காக அதானி குழுமம் நடத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை யில் இந்த ஆலை காற்று மற்றும் ஒலி மாசு இரண் டையும் ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும் உத்தேசிக்கப்பட்டுள்ள ஆலை ஒரு நாளைக்கு மொத்தம் 600 கிலோ லிட்டர் தண்ணீ ரைப் பயன்படுத்த உள்ளது. இதை உள்ளூர் நிலத் தடி நீர் ஆதாரங்களிலிருந்துதான் பெறவேண்டும். சிமெண்ட் அரைக்கும் ஆலைகள் மிகவும் மாசு ஏற்படுத்தும் வகைத் தொழில் என்பதால் ‘ ஆபத் தான தொழில்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய தொழிற்சாலையை அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியில் எப்படி அமைக்க முடியும்? ஆலையில் இருந்து வெளியாகும் தூசி ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் மீது படியும் போது அவை பாழாகிவிடும்.
ஏற்கனவே உள்ள விதிமுறைகளைத் தளர்த்தி ஆலையை அமைப்பது என்பது அனைத்து குடி மக்களுக்கும் சுத்தமான காற்று மற்றும் தண்ணீருக் கான அடிப்படை உரிமையை அப்பட்டமாக மீறுவ தாகும். இந்தத் திட்டம் மனிதர்கள் மற்றும் இயற்கை வளங்களுக்கு ஒரு பேரழிவைத் தவிர வேறில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சகம் சில செல்வாக்கு மிக்க தனி யார் நிறுவனங்களின் வணிக நலன்களை ஊக்கு விக்கும் ஒரு ஏஜென்சியாக மாற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்ப விதிமுறைகள் தளர்த்தப்படு கின்றன அல்லது திருத்தி அமைக்கப்படுகின்றன.