headlines

img

மாசடைந்த மருந்தும் மடிந்த மழலைகளும்

மாசடைந்த மருந்தும் மடிந்த மழலைகளும்

மத்தியப் பிரதேசத்தில் விஷம் கலந்த சளிமருந்து குடித்து இருபது குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது வெறும் விபத்து அல்ல, முறையான மேற்பார்வை இல்லாத மருந்துத் தயாரிப்புத் துறையின் கொடூரமான முகம் இது.

ஶ்ரீஷான் பார்மசூட்டிகல்ஸ் தயாரித்த கோல்ட்ரிஃப் சளிமருந்தில் டைஎத்திலீன் கிளை கால் என்ற நச்சு வேதிப்பொருள் கலந்திருந்தது. இது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக் கப்பட்ட குழந்தைகளில் பதினேழு பேர் சிஹிந்த்வா ரா மாவட்டத்திலும், இரண்டு பேர் பெத்துல் மாவட் டத்திலும், ஒருவர் பந்துர்னாவிலும் இறந்துள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சோகத்தின் பின்னால் உள்ளது அரசின் அலட்சியம். ஆன்லைன் தேசிய மருந்து உரிம அமைப்பின்படி பதினெட்டு மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள், ஆபத்து தடுப்பு நடவ டிக்கைக்கான (CAPA) வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொண்டன என்று ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், ஒரு மாநிலம் கூட திருத்தப்பட்ட மருந்து உற்பத்தி விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றவில்லை. இது வெறும் தவறு அல்ல, குற்றம்.

சிஏபிஏ வழிகாட்டுதல்கள் மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்தவும், உற்பத்தி சிக்கல்களைத் தீர்க்க வும் உருவாக்கப்பட்டவை. ஆனால் காகிதத்தில் மட்டுமே இருக்கும் விதிமுறைகள் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றாது. 3838 மருந்து நிறுவனங்கள் திருத்தப்பட்ட அட்டவணை எம்-ஐ பின்பற்றியுள்ளதாக தரவு சொல்கிறது. ஆனால் கண்காணிப்பு எங்கே?

மருந்தை எழுதிக் கொடுத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார்? மாசடைந்த மருந்துகளை உற்பத்தி செய்தவர்கள், கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள், அலட்சியமாக இருந்த மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்புகள் – இவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? இந்தியாவின் மருந்துத் தயாரிப்புத் துறை உலகின் மூன்றாவது பெரிய துறை என்று பெருமை பேசும் நாம், குழந்தைகளுக்கு நஞ்சு கொடுக்கும் கொடூரத்தை எப்படி ஏற்றுக்கொள்வது?

இந்நிகழ்வு புதிதல்ல. கடந்த காலங்களிலும் மாச டைந்த மருந்துகளால் பல உயிர்கள் பலியாகி யுள்ளன. ஒவ்வொரு முறையும் விசாரணை கமிஷன் கள் அமைக்கப்படுகின்றன, அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன, ஆனால் நடைமுறையில் மாற்றங்கள் ஏதும் நிகழ்வதில்லை. ஸ்ரீஷான் பார்ம சூட்டிகல்ஸ் மீது இந்திய மருத்துவ சங்கம் நடவடிக் கை கோரியுள்ளது. ஆனால் இதுபோன்ற நிறுவனங் கள் எப்படி உரிமம் பெறுகின்றன என்பதே கேள்வி

மருந்துத் தொழிலில் லாபம் மட்டுமே குறிக்கோ ளாக மாறிவிட்ட நிலையில், மக்களின் உயிர் பாது காப்பு எங்கே? அரசு தனியார் மருந்து நிறுவனங்க ளுக்கு சலுகைகள் வழங்குவதில் ஆர்வம் காட்டு கிறது, ஆனால் அவற்றைக் கண்காணிப்பதில் அதே ஆர்வத்தை காட்டுவதில்லை. மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்புகளுக்கு போதிய பணியாளர்களும் வசதிகளும் இல்லை என்பதும் உண்மை. கடுமை யான தண்டனைகளும், வெளிப்படைத் தன்மை யும், சுதந்திரமான கண்காணிப்பும் இல்லாவிட்டால், அடுத்த சோகம் வெகு தொலைவில் இல்லை. குழந் தைகளின் உயிர்கள் வியாபார லாபத்திற்கு பலியாகும் இந்த நிலைமை மாற வேண்டும்.