ஆணவப் படுகொலைகளை தடுக்க அரசு தனிச் சட்டம் இயற்ற கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, அக்.8 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்ட 16 ஆவது மாநாடு கலை காவேரி நுண்கலை கல்லூரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கவிஞர்கள் சிவ.வெங்க டேஷ், இளங்குமரன், சீத்தா ஆகியோர் தலைமை வகித்தனர். அஞ்சலி தீர்மானத்தை சரவணன் வாசித்தார். கவிஞர் சுஜாதா சஞ்சய் குமார் வரவேற்புரையாற்றினார். மாநில துணை பொதுச் செயலாளர் எழுத் தாளர் களப்பிரன் தொடக்க உரையாற்றி னார். கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி இயக்குநர் மற்றும் செயலர், அருட்பணி சூ. லூயிஸ் பிரிட்டோ வாழ்த்துரை வழங்கினார். பண்பாட்டு அறிக்கையை காளிராஜ், கலை இலக்கிய அறிக்கையை பேராசிரி யர் பாலின், செயலாளர் அறிக்கையை வழக்க றிஞர் ரங்கராஜன், நிதி அறிக்கையை கவிஞர் அரிபாஸ்கர் ஆகியோர் வாசித்தனர். தீர்மானங்கள் திருச்சியில் அரசு நிர்வாகத்தின் பராமரிப் பில் உள்ள கூட்டம் நடத்தும் அரங்கங்களை குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும். கலையரங்கம் மாடியில் உள்ள அரங்கத் துக்கு ‘கவிஞர் நந்தலாலா அரங்கம்’ என்று பெயர் சூட்ட வேண்டும். திருச்சி பஞ்சப்பூ ரில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத் தில் நூலகம் ஒன்றை அனைத்து நவீன வசதி களோடும் உடனடியாக அரசு அமைக்க வேண்டும். காதல் திருமணம் செய்பவர்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதை தடுக்க அரசு உடனடியாக தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக வழக்கறிஞர் வி.ரங்கராஜன், செயலாளராக சீத்தா வெங்கடேஷ், பொருளாளராக அரி பாஸ்கர், 11 பெண் உறுப்பினர்கள் உள்பட 31 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில துணைத் தலைவர் கவிஞர் நீலா நிறைவுரையாற்றினார். கவிஞர் தமிழிவிமலா நன்றி கூறினார்.