tamilnadu

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க கோரிக்கை

விவசாயத் தொழிலாளர்களுக்கு  நல வாரியம் அமைக்க கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, அக்.8- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர் சங்க  சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.எஸ்.ஆர்.மணிமண்ட பத்திலிருந்து ஊர்வலமாக வந்து நகரத்தின் முக்கிய சாலை வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வந்த னர்.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர்  எம்.மகாலிங்கம், ஒன்றியத் தலைவர் அ. மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு செயலா ளர் கோ.பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பின ரும் மாநில துணைத் தலைவருமான க.மாரி முத்து, வி.தொ.ச. மாவட்டச் செயலாளர் கு. ராஜா, ஒன்றியச் செயலாளர் வி.ஜவஹர், மாவட்டத் துணைத் தலைவர் கே.விஜயா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றிய அரசு நூறு நாள் வேலையை குறைக்காமல் வழங்கி தினக் கூலி ரூ.700 வழங்க வேண்டும். நூறு நாள் வேலை கொடுக்காத நாட்களை கணக்கெடுத்து சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு தீபாவளி  பண்டிகை உதவித்தொகை ரூ.5000 வழங்க  வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக் கென நல வாரியம் அமைக்க வேண்டும் என  வலியுறுத்தினர். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.