பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாணவர் சங்கம் பேரணி
தஞ்சாவூர், அக்.8 - அமெரிக்க ஏகாதிபத்திய மற்றும் இஸ்ரேலின் இனப்படுகொலைகளை எதிர்த்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தஞ்சையில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்டத் தலை வர் வசந்த் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஹரிஷ், பாலஸ்தீனத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய ஒத்துழைப்புடன், இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொ லையை கண்டித்தும், பாலஸ்தீனத்தில் பட்டினியாலும், மருத்துவ வசதி இல் லாமலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், பொதுமக்கள் படும் இன்னல்கள் குறித்தும் சிறப்புரையாற்றி னார். மாநிலக் குழு உறுப்பினர் தர்ஷினி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் நவ சூரியா, தினேஷ், ஜெனிபர் மாவட்டக் குழு உறுப்பினர் மதன் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். இந்தப் பேரணி மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் தொடங்கி, புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை வரை நடைபெற்றது. கும்பகோணம் கும்பகோணம் அரசு கலை கல்லூரி யில் நடைபெற்ற ஆதரவு ஆர்ப்பாட்டத் திற்கு மாணவர் சங்க கிளைத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் மகேஸ்வரன் சிறப்பு ரையாற்றினார். மாநகர் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.