நெல் விளைவிக்கக் கூடிய மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக திகழும்!
வாணிப கழக இயக்குநர் ஆ.அண்ணாதுரை பேட்டி
திருவாரூர், அக்.8 - திருவாரூர் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங் களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சரால் அக்.2 ஆம் தேதி டெல்டா மாவட்டங் களின், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்து, விவசாயி களால் உற்பத்தி செய்யக்கூடிய நெல் மணிகளை எந்தவித சேதார முமின்றி கொள்முதல் செய்வது முதல் உலைக்கு செல்லும் வரை பாதுகாப்பாக சேர்க்க வேண்டும் என ஆணையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தால் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை விரைவு படுத்துவதற்காக வட்டம் வாரியாக 12 மண்டல மேலாளர்கள் நிய மிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத் திற்கு ஒத்துழைப்பு வழங்கி வரு கின்றனர். மேலும், கடந்த 60 ஆண்டு களாக இல்லாத அளவிற்கு, நமது மாநிலத்தில் நெல் விளைச்சல் அதி கரித்துள்ளது. டெல்டா மாவட்டம் மட்டுமின்றி, அனைத்து மாவட்டங் களிலும் நெல் பரப்பு அதிக மாகியுள்ளது; அதனால் உற்பத்தி யும் அதிகமாகியுள்ளது. ஒவ்வொரு ஹெக்டேரிலும், ஆறு டன் அள விற்கு நெல் விளைகிறது. எதிர்கா லத்தில் நெல் விளைவிக்கக் கூடிய மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழும். தற்சமயம் திருவாரூர் மாவட் டத்தில், உற்பத்தியாகியுள்ள நெல்மணிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்கனவே கூடுதல் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. அந்த இடங்களின் பற்றாக்குறை யினால், புதிதாக மூன்று கேப் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 8000 டன் அளவு நெல்லை, வெளி மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நடவடிக் கைகள் மூலமாக, கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்காமல் பாதுகாப்பாக இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, வலங்கைமான் வட்டம், கீழஅமராவதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலை யம், கொரடாச்சேரி ஒன்றியம், ஊர்குடி ஊராட்சியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் பதனிடப்படுவதையும், நெல் மூட்டைகள் இருப்புகள் குறித்தும், நெல் வரத்துகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் ஒன்றியம், திரு நெய்பேர் ஊராட்சியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் குன்னியூர் ஊராட்சியி லுள்ள நேரடி கொள்முதல் நிலையம், கொரடாச்சேரி ஒன்றி யம், வண்டாம்பாலை ஊராட்சியி லுள்ள சேமிப்பு கிடங்கில் நெல் இருப்பு விவரம் குறித்து நுகர்பொ ருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் வ.மோகனச் சந்திரன், நாகப்பட்டினம் நாடாளு மன்ற உறுப்பினர் வை.செல்வ ராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பி னர் பூண்டி கே.கலைவாணன், நுகர் பொருள் வாணிபக் கழக முது நிலை மண்டல மேலாளர் சர வணன், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக மேலாளர் மனோ கரன் உள்ளிட்ட அரசு அலுவலர் கள் உடனிருந்தனர்.