tamilnadu

img

கோல்ட்ரிஃப் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கைது!

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் எஸ்.ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து இதுவரை 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மருந்தைப் பரிந்துரைத்த மருத்துவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது  காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீசன் என்ற மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ரங்கநாதனை மத்தியப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அசோக் நகர் வீட்டிலிருந்தவரை கைது செய்த ம.பி. காவல்துறையினர் சுங்குவார்சத்திரம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்