headlines

img

நெல் சாகுபடி வீழ்ச்சி: ஆபத்து மணி

நெல் சாகுபடி வீழ்ச்சி: ஆபத்து மணி

காவிரி டெல்டாவில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது என்பது கவலைக்குரிய செய்தி. கடந்த ஆண்டு 3.2 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடந்த நிலையில், இந்த ஆண்டு வெறும் 1 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடை பெற்றுள்ளது.

இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் குறுவை பருவத்தில் தாமதமான விதைப்பு என்று விவசாயி களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். பிப்ரவரி-ஏப்ரல் மாதங்களில் பருவம் தவறி பெய்த மழை இதற்குக் காரணம். இதனால் குறுவை அறுவடை தாமதமானது, அதனை தொடர்ந்து சம்பா விதைப்பும் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

பொதுவாக சம்பா மற்றும் தாளடி பருவங்க ளில் 12-13 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டு குறுவை பருவத்தில் 3.9 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடந்தது. ஆனால் அதிகாரிகள் எதிர்பார்த்த 5.6 லட்சம் ஏக்கரை எட்டவில்லை. இப்போது கால் பங்கு நிலங்களில் இன்னும் அறுவடை முடியவில்லை.

தாளடி பருவத்தில் தாமதமாக விதைப்பு செய் யப்படும் பயிர்கள் வடகிழக்கு பருவமழையால் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது என்று விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.

சாகுபடி குறைவோடு மட்டுமல்லாமல், அறுவடை செய்யப்பட்ட நெல்களை விற்பனை செய்வதில் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஒரத்தநாடு, திருவையாறு, அம்மாப்பேட்டை, நீடாமங்கலம், மன்னார்குடி போன்ற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மூட்டை நெல்கள் சாலை களிலும் கொள்முதல் நிலையங்களிலும் கொட் டப்பட்டுள்ளன. தொடர் மழையில் இவை நனைந்து வீணாகும் ஆபத்து உள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிகக் கழகம் மூலம் விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும். ஈரப்பதம் 17 சதவீதம் என்பதை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரசு, தனியார் கிடங்குகளிலும், தேவைப்பட்டால் திறந்தவெளி கிடங்குகளிலும் போர்க்கால அடிப்படையில் சேமிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மொத்த நெல்லில் 38 சதவீதம் காவிரி டெல்டாவில் இருந்து வருகிறது. 2023-24ல் 26.9 லட்சம் டன் உற்பத்தி நடந்தது. இந்த நிலையில், சாகுபடி பரப்பு குறை வும் கொள்முதல் தாமதமும் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை பாதிக்கும். காவிரி டெல்டா தமிழகத்தின் நெற்களஞ்சியம். அதன் உற்பத்தி திறனை பாது காப்பது நமது கூட்டுப் பொறுப்பு. உடனடி தீர்வு களை அரசு செயல்படுத்த வேண்டும். விவசாயி களின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்று நட வடிக்கை எடுப்பதே விவேகமான அணுகுமுறை யாக இருக்கும்.