அண்ணாநகரில் மருத்துவ முகாம் இலவச கண் பரிசோதனை
முகாம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் கீழ்பாக்கத்தில் அண்மை யில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கட்டுமான தொழிலாளர் சங்கம், உமா கண் மருத்துவ மனை, விஷன் பவுண்டேஷன் மற்றும் ஹண்டே மருத்துவ மனை இணைந்து இந்த முகாமை நடத்தின. கட்டுமான சங்கம் பகுதித் தலைவர் இ.கே.பழனி தலைமையில் நடைபெற்ற முகாமை சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.முருகேஷ் தொடங்கி வைத்தார். சிஐடியு மாவட்ட பொருளாளர் பி.சுந்தரம், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.மார்ட்டின், வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் ஆர்.கார்த்தி கேயன், பொருளாளர் ஆர்.தீபக் மற்றும் தோழமை அமைப்பு களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.