சேவை மனப்பான்மை, உடல் நலம் விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம்
சென்னை,அக்.6- ஆர்சிஎம் நிறுவனத்தின் நாடுமுழுவதும் நடைபெற்ற அதிகாரத்திற்கான பயணம் தமிழ்நாட்டின் சென்னை நகரத்தில் அக்.6ஆம் தேதி வெற்றிகரமாக நிறை வடைந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் வேகமாக விற்பனையாகும் நுகர்வு பொருட்களை உறுப்பினர்கள் மூல மாக ஆர்சிஎம் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட செயல்பாட்டு வாங்குவோர் உள்ளனர். தமிழகத்தில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் எந்த வயதையும் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டு, வாழ்வாதாரத்தை வலுப் படுத்துவதற்கு முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக ஆர்சிஎம் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் குமார் தெரிவித்தார்.