headlines

img

முதலாளித்துவத்தின் இரட்டை முகம்

முதலாளித்துவத்தின் இரட்டை முகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்-1 பி விசா விண்ணப்பங்களுக்கு ஒரு லட்சம் டாலர் (சுமார் 84 லட்சம் ரூபாய்) கட்டணம் விதித்துள்ளார். எச்-1 பி என்பது இந்திய, சீன தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அவசியமான தற்காலிக வேலை விசா. ஆண்டுக்கு 85,000 விசாக்கள் வழங்கப்படு கின்றன, இதில் 70% இந்தியர்களுக்கே செல்கிறது. முன்பு சில லட்சம் ரூபாய் மட்டுமே செலவு. இப்போது 84 லட்சம் ரூபாய். 

இந்நிலையில், அக்டோபர் 4 அன்று பன்னி ரண்டு பெரிய அமெரிக்க தொழில்துறை அமைப்பு கள் - செமிகண்டக்டர், மென்பொருள், சில்லறை வணிக நிறுவனங்கள் - டிரம்ப்புக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “எங்களுக்கு வெளிநாட்டு திறமை தேவை. இல்லையென்றால் வேலைகள் காலியாகும், பொருளாதாரம் பாதிக் கும்” என்கிறார்கள். இது முக்கியமான வளர்ச்சிப் போக்கு.

ஆனால் இவர்களின் கவலை, நிச்சயம் தொழிலாளர் நலன் சார்ந்தது இல்லை. ஏனென் றால், எச்-1 பி என்பது கார்ப்பரேட் சுரண்டலின் சிறந்த கருவி. இந்திய பொறியாளர் ஒரு நிறுவனத் துடன் பிணைக்கப்பட்டுள்ளார் - வேறு இடம் மாற முடியாது. அமெரிக்க பொறியாளருக்கு வருடம் 1,20,000 டாலர் ஊதியம் கொடுக்கும் நிறுவனம், எச்-1 பி தொழிலாளிக்கு 60,000-80,000 டாலர் மட்டுமே கொடுக்கும். எதிர்ப்பு தெரிவித்தால் விசா ரத்து, நாடு கடத்தல். இதுதான் “திறமை தேவை” என்ற பெயரில் நடக்கும் மலிவான அடிமை உழைப்பு. இப்போது டிரம்ப் அந்த சுரண்டலோடு மேலும் கட்டண உயர்வு மூலம் கூடுதலாக சுரண்டுகிறார்

நிறுவனங்கள் “போதுமான பொறியாளர்கள் இல்லை” என்கின்றன. உண்மை என்ன? அமெ ரிக்க பல்கலைக்கழகங்கள் ஆயிரக்கணக்கான திறமையாளர்களை ஒவ்வொரு ஆண்டும் உரு வாக்குகின்றன. ஆனால் அவர்களுக்கு சரியான ஊதியம், மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம், வேலை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மறுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எச்-1 பி தொழிலாளி க்கு விசா பயம் என்ற கயிறு - அமைதியாக வாய் மூடி வேலை செய்வார்கள். இதுதான் “திறமை தேவை” என்ற பொய்யின் உண்மை முகம். இந்த முரணில்  இழப்பவர்கள் யார்? அமெரிக்க தொழிலாளியும், இந்திய தொழிலாளியும். எச்-1 பி விசா என்ற முறை அமெரிக்கரின் ஊதியத்தை குறைக்கிறது - “உனக்கு கொடுக்காவிட்டால் விசாவில் மற்றொரு வரை கொண்டு வருவோம்” என்ற அச்சுறுத்தல். மறுபுறம், இந்திய ஊழியர் விசா பிணைப்பில் சிக்கி சுரண்டப்படுகிறார். முதலாளித்துவம் இரு வரையும் திறமையாக பிரித்து வைக்கிறது.

இது மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடை யிலான முரண்பாடு; முதலாளிகளுக்கும் உழைப்பாளிகளுக்கும் இடையிலான போராட் டம். டிரம்ப் அராஜகமும், கார்ப்பரேட் கூக்குர லும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். தொழி லாளி வர்க்கம் - அமெரிக்காவிலும் இந்தியாவி லும் - இதை புரிந்து ஒற்றுமையாக போராட வேண்டும். அதுதான் உண்மையான எதிர்காலம்.