headlines

img

அதிகரிக்கும் அசமத்துவம்

அதிகரிக்கும் அசமத்துவம்

‘உலக அளவில் செல்வத்தை சமமாகப் பகிர்ந்த ளிப்பது என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே உள்ளது’ கடந்த 20 ஆண்டுகளில், சீனாவில் தனிநபர் நிதி சொத்துக்கள் பெருமளவில் அதி கரித்துள்ளன. உலகின் மிகப்பெரிய, நிதி காப்பீடு மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ஜெர்மனியின் அலையன்ஸ் குழுமத் தின் சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சராசரியாக தனிநபர் ஒருவர் சொத்துக்களை வாங்கும் சக்தி சீனாவில் கடந்த 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்த அளவி லான செழிப்பை அடைவதற்கு மிக நெருக்க மான நாடாக  பல்கேரியா மட்டுமே உள்ளது.  அங்கு  உண்மையான தனிநபர் நிதி சொத்துக்கள் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது.  அதே நேரத்தில் ருமே னியா மற்றும் இந்தியாவில் இதே கால கட்டத் தில் தனிநபர் சொத்துக்களை  வாங்கும் சக்தி வெறும் 5 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது

2024 ஆம் ஆண்டு இந்திய குடும்பங்கள் தங்கள் செல்வத்தை  வேகமாகச் சேர்த்ததாக கூறப் பட்டாலும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குடும்பங்கள் உயர் நடுத்தர வர்க்கம் ஆகும். இந்தி யாவில் பெரும்பாலான குடும்பங்கள் மாதந்தோ றும் குடும்பத்தை நடத்தவே தள்ளாடுகின்றன.  வளர்ச்சி என்று ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சுட்டிக்காட்டினாலும் மக்கள் மீதான கடன் 41 விழுக்காடு அதிகரித்துள்ளது

வீட்டுக் கடன் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 8 சதவீத புள்ளிகள் அதிகரித்து 41 ஆக உயர்ந் துள்ள நிலையில், செல்வ ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்துள்ளன. நாடு விரைவாக வளர்ச்சிய டைகிறது என்று அரசாங்கம் கூறிக்கொண்டாலும் செல்வ சமத்துவமின்மை மிகவும் கூர்மையாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உலகில் செல் வந்தர்களின் சொத்து அதிகரித்த 13 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2004 ஆம் ஆண்டில், இந்தி யாவின் பணக்காரர்களில் 10விழுக்காட்டினர் நாட்டின் செல்வத்தில் 58 விழுக்காட்டை கொண் டிருந்தனர். இது கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 65விழுக்காடாக அதிகரித்துள்ளது.  இது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்தியா பணக்கார நாடு. ஆனால் மக்களோ ஏழைகள் என்ற சொல் இதற்கு பொருத்தமாக இருக்கும்.

விரைவான மக்கள் தொகை வளர்ச்சி, குறைந்த விவசாய உற்பத்தி மற்றும் வேலை யின்மை போன்ற காரணங்களால் நாட்டில் வறுமை ஒரு பெரிய பிரச்சனையாக தொடர்கி றது. வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு நீண்ட கால திட்டமிடலும், அதற்கான திட்டங்களை  தொடர்ந்து செயல்படுத்துவதும் அவசியம். ஆட்சி யாளர்கள் கூறும் பொருளாதார வளர்ச்சியால் பெரும்பாலான மக்கள்  பயன்பெறவில்லை. ரேசன் கடையை நம்பிதான் பெரும்பாலான குடும்பங் கள் உள்ளன.  இந்தியா உள்பட உலக அளவில் செல்வத்தின் சமமான விநியோகம் என்பது தொலைதூரக் கனவாகவே நீடிக்கிறது.