அயோத்தியில் வெடிவிபத்து 5 பேர் பலி
பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரு கிறது. கடந்த 2 வார காலமாக “ஐ லவ் முகமது” போஸ்டரால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்து - முஸ்லிம் மக்களிடையே மோதல் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த பதற்றம் தணிவதற்குள் அயோத்தியில் குண்டுவெடிப்பு போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ராமர் கோவில் உள்ள பகுதியான அயோத்தியில் உள்ள புரா கலந்தர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்லா பாரி கிராமத்தில் வியாழக்கிழமை அன்று மாலை பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் ஒரு வீடு இடிந்து முற்றிலும் தரைமட்ட மானது. 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். வெடிவிபத்துக்கான காரணம் உட னடியாகத் தெரியவில்லை. இருப்பினும் சில உள்ளூர் அதிகாரிகள் இது எரிவாயு சிலிண்டர் வெடிப்பாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் இது குண்டு வெடிப்பு நிகரானது என்ற கோணத் திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.