பீகார் சட்டமன்ற தேர்தல் ஆர்ஜேடி - சிபிஎம் தொகுதி பங்கீடு ஆலோசனை
பாட்னா 243 தொகுதிகளை கொண்ட பீகா ரில் இரண்டு கட்டங்களாக அடுத்த மாதம் (நவம்பர் 6, 11) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்ட ணியும், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான “இந்தியா” கூட்டணியும் (மகா கூட்டணி - பீகார் மாநில அள வில்), ஆம் ஆத்மி, மஜ்லிஸ், ஜன் சுராஜ் உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் தேர்தல் களத்தில் உள்ளன. இந்நிலையில்,”இந்தியா” கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான வேலைகள் தீவிர மாக நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டணியில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்-எல்), விகாசில் இன்ஸான் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலை யில், வியாழனன்று ராஷ்டிரிய ஜனதா தளம் - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற் கொண்டுள்ளன. வியாழனன்று காலை பாட்னா வில், சிபிஎம் பீகார் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் ஏ.விஜய ராகவன், டாக்டர் அசோக் தாவ்லே ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைத் தோற்கடித்து, கட்சியின் சுயேச்சை யான வலிமையை அதிகரிப்பதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதே போல இந்த நோக்கத்திற்காக தொடர்புடைய தீர்மானங்கள் மற்றும் பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கான திட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டன. சிபிஎம் மகா கூட்டணியின் (இந்தியா) பீகார் தேர்தல்களில் போட்டியிடும் என்ப தை முன்பு நடைபெற்ற மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆலோசனை தொடர்ந்து வியாழக்கிழமை அன்று மாலை ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும், பீகார் எதிர்க்கட்சித் தலைவரு மான தேஜஸ்வியின் பாட்னா இல்லத்தில், ஆர்ஜேடி - சிபிஎம் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஏ.விஜயராகவன், டாக்டர் அசோக் தாவ்லே, மாநிலச் செயலாளர் லாலன் சவுத்ரி, மத்தியக் குழு உறுப்பினர் அவதேஷ் குமார், சிபிஎம் சட்டமன்ற குழு தலைவர் அஜய் குமார் எமஎல்ஏ ஆகியோர், தேஜஸ்வியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். விரைவில் “இந்தியா” கூட்டணி யில் சிபிஎம்-க்கு எத்தனை தொகுதி கள் என்பது தொடர்பாக இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.