tamilnadu

img

பீகாரில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

பீகாரில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

243 தொகுதிகளை கொண்ட பீகாரில் இரண்டு கட்டங்களாக அடுத்த மாதம் (நவம்பர் 6, 11) சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக பாட்னா, தர்பங்கா, மாதே புரா, சஹர்சா, முசாபர்பூர், கோபால்கஞ்ச் சிவான், சரண், வைஷாலி, சமஸ்திபூர், பெகுசராய், லக்கிசராய், முங்கர், ஷேக்புரா, நாளந்தா, பக்சர் மற்றும் போஜ்பூர் மாவட்டங்களின் 121 தொகுதி களுக்கு நவம்பர் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. ஆவணங்களின் பரிசீலனை அக்., 11 அன்று (சனி) முதல் தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 20 ஆகும்.