சென்னையில் வடகிழக்கு பருவமழையையொட்டி ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து புறப்படும், எந்த ஒரு தொலைதூர ரயிலும் ரத்து செய்யப்படவில்லை. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலையில் புறப்படும் சில ரயில்கள் மட்டும் தாமதமாக புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நவ.8 மற்றும் 9 ஆகிய இரு நாள்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.