செங்கல்பட்டு,ஏப்.29- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த்க்கு, தாயை கொலை செய்த வழக்கில் விடுதலையாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை மாங்காடு பகுதியில் 2018ஆம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் தந்தை பிழற்சாட்சியாக மாறிய நிலையில் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு. உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது