world

img

சீனாவில் தீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி!

சீனா,ஏப்.29- சீனாவில் உள்ள ஓர் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லியோனிங் மாகாணத்தில் செயல்பட்டு வந்த உணவகத்தில் இன்று (ஏப்.29) மதியம் 12.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிருந்த 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதுள்ளனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தற்போது வரை எந்தவொரு தகவலும் வெளிவராத நிலையில் படுகாயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.