தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்ரு நடைபெற்ற கூட்டத்தில் அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதை தொடந்து, அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் வேளாண் துறைக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிப். 18, 19 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும் என்றும், பிப். 20 ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
