பத்திரிகையாளர் ஜாகீர் அலி
முஸ்லிம்களைக் குறிவைத்து வெறுப்பை கக்கிய அசாம் முதலமைச்சர் மீது தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உயர்நீதிமன்றம் மற்றும் விசாரிக்க நேரமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்படியென்றால், எந்தெந்த மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதியிடம் நேரம் இருக்கிறது என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும்.
ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் படேல்
உலகக்கோப்பை போட்டியின் போது இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்கவில்லை. ஆனால் இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா, பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமிடம் கைகுலுக்கி அன்பாக நடந்து கொண்டார். இந்துத்துவா குண்டர்கள் ரோகித் சர்மாவை விமர்சிக்கத் தொடங்கி விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா
தில்லியில் உள்ள ஒரு பூங்காவிற்குள் காதலர்களைத் துன்புறுத்துவதற்காக பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் புகுந்தனர். இம்முறை நிலைமை தலைகீழாக மாறியது. காதலர்கள் பயந்து ஓடவில்லை. மாறாக, குண்டர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அடையாள அட்டையை கேட்டு, சரமாரியாகக் கேள்விகளையும் எழுப்பினர். இதனால் பஜ்ரங் தளம் குண்டர்கள் ஓட்டம் பிடித்தனர்.
திரிணாமுல் மூத்த தலைவர் டெரிக் ஓ’ பிரையன்
பிரதமர் மோடி நாடாளு மன்றத்தில் பேசுவதில் இருந்து ஓடிப் போகிறார். ஆனால், தனியார் செய்தி நிறு வனத்திற்கு பேட்டியளிக்கிறார். இந்த பேட்டி வெற்று வார்த்தைகள் அடங்கியது.
