தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (17-02-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,14,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.120 குறைந்து ரூ.14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.98,000-க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.12,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
