ஆரவல்லி மலைத்தொடரை அதானியின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல விடமாட்டோம்! அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் அறைகூவல்
புதுதில்லி ஆரவல்லி மலைத்தொடரை அதானியின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல ஒருபோ தும் அனுமதிக்க மாட்டோம் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் (AIAWU) சூளுரைத்துள்ளது. இதுதொடர்பாகச் சங்கத்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: பழங்குடியினர் அமைப்பின் அகில இந்தியக் குழுக் கூட்டத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் உள்ள ஆரவல்லி மலைத்தொடருக்குச் சென்றோம். இந்தப் பயணத்தில் தெலுங்கானா ஆதிவாசி பழங்குடியினர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பூசம் சச்சின், ஆந்திர மாநிலப் பொதுச் செயலாளர் கில்லோ சுரேந்திரா, தலைவர் எம். தர்மநாயக் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அனை வரும் ஆரவல்லிப் பகுதியை நேரில் பார்வை யிட்டு, அங்கிருக்கும் கள யதார்த்த நிலவரங்க ளை உன்னிப்பாகக் கவனித்தோம். இதுவரை புத்தகங்களில் மட்டுமே படித்திருந்த ஆரவல்லி மலைத்தொடரின் இயற்கை வரலாற்றை நேரில் கண்டபோது, மனித உயிர்வாழ்விற்கும் இயற்கைக்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத பிணைப்பு இன்னும் தெளிவாகப் புரிந்தது. பாலைவனம் பரவாமல் தடுக்கும் அரண் சுமார் 1.5 பில்லியன் (150 கோடி) ஆண்டு கள் பழமையான ஆரவல்லி மலைத்தொடர், உலகின் மிகப்பழமையான மலைத்தொடர்க ளில் ஒன்றாகும். குஜராத்தில் தொடங்கி ராஜஸ் தான் வழியாக தில்லி வரை சுமார் 800 கி.மீ. நீளம் கொண்ட இம்மலைத்தொடர், கடல் மட்டத்திலிருந்து 1,772 மீட்டர் உயரம் கொண்டது. தார் பாலைவனம் கிழக்கு நோக்கிப் பரவாமல் தடுக்கும் மாபெரும் இயற்கைய ரணாக இந்த மலைத்தொடர் திகழ்கிறது. இதன்மூலம் கோடிக்கணக்கான மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் இது பாதுகாக்கிறது. இயற்கை ஏரிகள், நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்புகளைக் கொண்டுள்ள ஆரவல்லி, பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதோடு, அரிய வனம் மற்றும் கனிம வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தச் சூழலி யல் மண்டலம் சமச்சீரான வளர்ச்சிக்கும் மனித இருப்புக்கும் இன்றியமையாததாகும். பெருநிறுவனங்களின் சுரண்டல் வேட்டை ஆனால் இன்று “வளர்ச்சி” என்ற போர்வை யிலும், பொய்யான காரணங்களைக் கூறியும், இந்தச் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆரவல்லி மலைத்தொடரை ஆக்கிரமித்து அழிக்க கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் குறி வைத்துள்ளன. ஆந்திராவின் விசாகப்பட்டி னம், நல்லமலா காடுகள் மற்றும் பாதேரு பகு திகளில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நடந்த இயற்கை வளச் சுரண்டல்களை நாட்டு மக்கள் அறிவார்கள். ஒன்றிய பட்ஜெட்டில் “பசுமை வழிச்சாலை களுக்காக (Greenfield Highways)” ஒதுக்கப் பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி, உண்மையில் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கும் ஒரு தந்தி ரமான கொள்கை முடிவாகும். இப்போது ஆரவல்லி மலைத்தொடரையும் கைப்பற்ற இதேபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன. ஆரவல்லியை அதானியிடம் ஒப்படைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அகில இந்திய அளவிலான போராட்டம் இயற்கையையும், மக்களின் வாழ்வாதா ரத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் பாதுகாக்க, ராஜஸ்தானின் உதய்பூரை முக்கிய மையமாகக் கொண்டு அகில இந்திய அள விலான “ஐக்கிய இயக்கத்தை” கட்டியெழுப்பு வோம். இதில் பழங்குடியின அமைப்புகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், சுற்றுச் சூழல் குழுக்கள் மற்றும் இதர ஜனநாயக வெகுஜன அமைப்புகளை ஒன்றிணைப்போம். நாட்டின் இயற்கை பாரம்பரியத்தைப் பாது காக்க அனைத்துத் தரப்பு மக்களும் இந்த இயக்கத்தில் முன்வந்து தீவிரமாகப் பங்கேற்குமாறு அன்போடு அழைக்கிறோம் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
