states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்

காடுகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கப்பட்டு, ஒன்றிய அரசின் வசம் உள்ளன. அதிகாரங்கள் அனைத்தும் தில்லியில் குவிக்கப்பட்டுள்ளதால் நாடு இன்று பெரும் விலையை எதிர்கொண்டு வருகிறது.

திமுக எம்.பி., திருச்சி சிவா

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் தொடங்கும்போது ஒன்றிய அரசின் கொள்கைகளை குடியரசு தலைவர் விளக்கி பேசுகிறார். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மட்டும் சட்டமன்றத்தில் அவர் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுகிறார். இது ஏன்?

பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக்

ஒன்றிய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, ஒடிசாவின் இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஒடிசா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண்

பொதுவாக ஒன்றிய அரசு பட்ஜெட்களில் ஒதுக்கப்படும் நிதி, களத்துக்கு வருவதில்லை. நிலைமை ஏற்கெனவே இவ்வாறு உள்ள சூழ்நிலையில், தற்போதைய பட்ஜெட்டோ வேலைவாய்ப்பு, சிறு-குறு தொழில்களுக்கு எல்லாம் நிதி என எதையும் ஒதுக்கக்கூடவில்லை. மாநிலங்களுக்கான நிதியும் குறைக்கப்பட்டிருக்கிறது.