states

img

ஊதிய உயர்வு கோரி மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு கோரி மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

கோவை, மார்ச் 11- ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்  வாரிய ஊழியர்கள் மாநிலம் தழு விய அறவழிப் போராட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 01.12.2023 முதல் வழங்க வேண் டிய ஊதிய உயர்வை உடனடியாக  வழங்க வேண்டும். 01.12.2023 முதல்  வழங்க வேண்டிய 26 மாத நிலுவைத் தொகையை வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ் நாடு மின்சார தொழிலாளர் சம்மே ளம், தமிழ்நாடு மின்வாரிய பட்ட தாரி தொழிற்சங்கம், டாக்டர் அம் பேத்கர் பணியாளர் பொறியாளர் சங்கம், மின்வாரிய அணைத்து பணியாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து புதனன்று  மாநிலம் தழுவிய அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக கோவை  டாடாபாத் மின்வாரிய மத்திய  அலுவலகம் முன்பு நடைபெற்ற  காத்திருப்புப் போராட்டத்திற்கு, சிஐ டியு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில இணைச் செயலாளர் டி. மணிகண்டன் தலைமை வகித்தார்.  மண்டலச் செயலாளர் டி.கோபால கிருஷ்ணன், பொறியாளர் அமைப்பு மாநில துணைப் பொதுச்  செயலாளர் சோமசுந்தரம், மின் சாரத் தொழிலாளர் சம்மேளன மாநில இணைச் செயலாளர் கந்த வேல் உள்ளிட்ட திரளான மின் வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர். ஈரோடு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், ஈரோடு மேற் பார்வை பொறியாளர் அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு மின் ஊழியர் மத்திய  அமைப்பின் கிளைத் தலைவர்  சி.ஜோதிமணி தலைமை வகித் தார். மாநில உதவிச்செயலாளர் பி. ஸ்ரீதேவி சிறப்புரையாற்றினார். மின் சார தொழிலாளர் சம்மேளனம், மின் வாரிய பாட்டாளி தொழிற்சங்கம், டேன்ஜெட்கோ யூனியன், பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேசன் அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.  சேலம் சேலம், உடையாப்பட்டி பகுதி யில் உள்ள மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  போராட்டத்திற்கு, சிஐடியு சேலம் மின்பகிர்மான வட்ட கிளைத் தலை வர் குமார் தலைமை வகித்தார். பொதுக்கட்டுமான வட்டம் நிர்வாகி கள் வெங்கடேசன், ஜெயக்குமார் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். தருமபுரி தருமபுரி மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செய லாளர் பி. ஜீவா தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் தீ. லெனின்  மகேந்திரன், மாவட்டத் தலைவர் வி. சீனிவாசன், பொருளாளர் ஆர். திம் மராயன், பாட்டாளி தொழிற்சங்கம் பொதுச்செயலாளர் எம். சின்ன சாமி, பொறியாளர் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர். சுந்தர மூர்த்தி மின்வாரிய ஓய்வு பெற் றோர் அமைப்பின் மாவட்ட செயலா ளர் ஜி. பி. விஜயன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.