ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை தரகு நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு
பிப்., 13 அன்று ரிசர்வ் வங்கி மூலதன சந்தை பங்கேற்பாளர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதற்கான திருத்தப்பட்ட விதி முறைகளை வெளி யிட்டது. அதாவது பங்குச்சந்தை இடைத் தரகு நிறுவனங்களு க்கு வங்கிகள் கடன் வழங்கும் முறையில் இருந்த தளர்வுகளை நீக்கி, ரிசர்வ் வங்கி புதிய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய விதிமுறைகளில்,”இனி புரோக் கர்கள் வங்கிகளிடம் கடன் பெற வேண்டு மென்றால், அந்தத் தொகைக்கு இணை யான 100 சதவீத பிணைத் தொகையை கண்டிப்பாகச் சமர்ப்பிக்க வேண்டும். இடைத்தரகர்கள் தங்களின் சொந்த வர்த்தகத்திற்காக வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதற்கு இனி அனுமதி கிடை யாது” என அதில் கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி அறி விப்பால், முன்னணி தரகு நிறுவனங்க ளின் பங்குகள் (BSE, Angel One, MCX, Groww) 5% முதல் 10% வரை சரிவைச் சந்தித்தன. சந்தையில் புரோக்கர்கள் அதிகப்படியான அபாயங்களை எடுப்ப தைத் தவிர்க்கவும், வங்கிப் பணம் தவறா கப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
