தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026-27 - முக்கிய அம்சங்கள்
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில் 10,469 வீடுகள் கட்டுவதற்கு, ரூ.630 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
“காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்கா ஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு”
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு!
உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு
மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு!
சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு!
போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு. மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு ரூ.1722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
முதல்வர் கிராம சாலைத் திட்டத்திற்கு ரூ.8,911 கோடி நிதி ஒதுக்கீடு.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி!
"அம்பேத்கர் உயர் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 385 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க ரூ.16 கோடி ஒதுக்கீடு
சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்த ரூ.11,000 கோடி ஒதுக்கீடு.
மின்சாரத்துறை - ரூ.18,091 கோடி ஒதுக்கீடு
பொதுப்பணித்துறைக்கு ரூ.1,694 கோடி ஒதுக்கீடு
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.21,132 கோடி நிதி ஒதுக்கீடு
தொழில்துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு
நீர்வளத்துறை - ரூ.10,076 கோடி ஒதுக்கீடு
உணவு பாதுகாப்புத்துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு
சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு
அதனை தொடர்ந்து அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் வேளாண் துறைக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் 2026-27 - முக்கிய அம்சங்கள்
2020-21 ஆம் ஆண்டில் 1,08,000 மெட்ரிக் டன்னாக இருந்த வேளாண் வர்த்தகம் இந்த அரசின் நடவடிக்கைகளால் 8,00,000 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
2026-27 நிதியாண்டில் வேளாண் துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு.
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் 77,500 வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறுதானிய இயக்கத்துக்கு ரூ.178 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.62 கோடி கூடுதல் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், 456 பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4.56 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு ரூ.33,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
