tamilnadu

img

பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்த வந்த ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் கைது

பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்த வந்த ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் கைது

சென்னை, பிப்.16 – பணி நிரந்தரம் கோரி திங்களன்று (பிப்.16) சென்னையில் போராட்டம் நடத்த வந்த ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சித் துறை தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் அரசாணை 152, 139 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர், தூய்மைப் பணியாளர், குடிநீர், ஓட்டுநர், டிபிசி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சிஐடியு தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி, குறைந்தபட்ச ஊதிய அரசாணை 2(டி)62-படி  தினசரி ஊதியம் நிர்ணயித்து 14,780 ரூபாயும், தூய்மை காவலர்களுக்கு 12,780  ரூபாய் மாத ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சிகளில் வேலை செய்யும் டிபிசி  ஊழியர்களுக்கு 670 ரூபாய் தினசரி ஊதியம் வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் ஒப்பந்த, சுய உதவிக்குழு ஊழியர்களுக்கு மாதம் 30 நாட்கள் வேலை வழங்க வேண்டும். பி.எப், இ.எஸ்.ஐ பிடித்தங்களில் முறை கேடுகள் செய்யும் ஒப்பந்தத் தொழி லாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளனம் 3 நாள் தொடர் போராட்டத்தை அறிவித்தது. இதன்படி, சம்மேளன தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலை வர் ஜி.சுகுமாறன் தொடங்கி வைத்தார். சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் கே.ரங்க ராஜன், சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார் உள்ளிட்டோர் பேசினர். இதனையடுத்து போராட்டத்திற்கு அனுமதி மறுத்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.