tamilnadu

img

திருவான்மியூரில் பயன்பாட்டுக்கு வந்த ‘U’ வடிவ மேம்பாலம், நடைமேம்பாலம் துணை முதலமைச்சர் திறந்துவைத்தார்!

திருவான்மியூரில் பயன்பாட்டுக்கு வந்த ‘U’ வடிவ மேம்பாலம், நடைமேம்பாலம் துணை முதலமைச்சர் திறந்துவைத்தார்!

ராஜீவ் காந்தி சாலை (ஓ.எம்.ஆர்)  டைடல் பார்க் சந்திப்பில் நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ‘U’ வடிவ மேம்பாலம் மற்றும் நடைமேம்பாலம் ஆகிய வற்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் கள். ராஜீவ் காந்தி சாலையில் டைடல் பார்க் சந்திப்பில் அமைந் துள்ள போக்குவரத்து சமிக்ஞையில் தற்போது வாகனங்கள் வெகுநேரம் காத்தி ருக்க வேண்டிய சூழலைக் கருத்தில் கொண்டு, டைடல் பார்க் சந்தி ப்பில் ரூ.27.50 கோடி செலவில் U’ வடிவ மேம்பாலமும், பாதசாரிகள் சாலை யினை கடக்க ரூ.11.30 கோடி செல வில் திருவான்மியூர் MRTS ரயில் நிலை யம் முதல் டைடல் பார்க் மேம் பாலம் வரையில் மேற்கு நிழற்சாலை சாலை யின் குறுக்காக ஒரு நடைமேம்பாலமும் கட்டப்பட்டுள்ளது. தற்போது, பயன்பாட்டிற்கு திறக்கப் பட்டுள்ள டைடல் பார்க் மேம்பாலம் 510 மீட்டர் நீளமும் 8.50 மீட்டர் அகலமும் கொண்ட பாலம் ஆகும். 12.50 மீ நீள முள்ள 16 கண்களை கொண்ட. ராஜீவ் காந்தி சாலையில் ஒரு ஏறு சாய்தளம், ஒரு இறங்கு சாய்தளம் மற்றும் தரமணி சி.எஸ்.ஐ. ஆர். சாலையில் ஒரு இறங்கு சாய்தளம் ஆகியவற்றை கொண்ட இந்தப் பாலத்தினை ஒட்டி ராஜீவ் காந்தி சாலை மற்றும் ,தரமணி சி.எஸ். ஐ.ஆர் சாலைகளில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.