இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாடு அரசு சார்பாக சமூக முன்னேற்றத்தின் வளர்ச்சிக்காகப் பங்காற்றுபவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 4 ஆண்டுகளில் சங்கரய்யா அவர்கள். ஆர்.நல்லகண்ணு, ஆசிரியர் கி. வீரமணி மற்றும் முனைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
2025ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு வழங்கப்படுகிறது.
10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் 15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்