உயர் மின் கோபுரம் அமைக்கும் விவகாரம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோரிக்கை ஏற்பு
உடுமலை, டிச. 18- மடத்துக்குளம் அருகே விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் உரிய இழப்பீடு வழங்க முத்தரப்பு பேச்சுவார்த்தை யில் உடன்பாடு எட்டப்பட்டது. கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில், தேனி மாவட்டம் சப்பகுண்டு முதல் திருப்பூர் மாவட்டம் அணிக்கடவு வரை உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை மின் வாரியம் தொடங்கியது. இந்த மின்பாதையா னது மடத்துக்குளம் தாலூகா, மைவாடி கிராமத்தில் உள்ள பவர் கிரிட் வழியாகச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது. விளைநிலங்கள், தென்னை உள்ளிட்ட பயன்தரும் மரங்கள் மற்றும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்காகப் பல்வேறு போராட்டங் கள் நடத்தப்பட்ட நிலையில், இழப் பீடு வழங்க மின் வாரியம் ஏற் கனவே ஒப்புக்கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த வெள்ளி யன்று மைவாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில், மின் வாரிய அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்பு மின்றி பணிகளைத் தொடங்கினர். இதைக் கண்டித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தலைமையில் விவசாயிகள் திரண்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தலை யிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து, மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட் டாட்சியர் குணசேகரன் தலைமை யில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் துணை வட்டாட்சி யர் வளர்மதி, மின்வாரிய அதிகாரி பழனிசாமி, காவல்துறை உதவி ஆய் வாளர் மோகன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் வீரப்பன், ராஜரத்தினம், வெள்ளி யங்கிரி, கணேஷ், தர்மராஜ், சிவ ராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் விவசாய சங்கத் தினர் முன்வைத்த கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனை வருக்கும் இன்னும் 15 நாட்களுக்குள் உரிய இழப்பீட்டுத் தொகையை மின் வாரியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு முழுமையாக சென்றடையும் வரை, விவசாய நிலங்களில் மின் வாரியம் எந்தவிதப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. இழப்பீடு பெறுவதற்குத் தேவையான நிலம் தொடர்பான சான்றிதழ்களை வரு வாய்த்துறை உடனடியாக வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. உரிய காலத்தில் இழப்பீடு வழங்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப் படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
