மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
இந்திய கல்விமுறையை அழிக்க ஆர்எஸ்எஸ் முயற்சி செய்து வருகிறது. ஆர்எஸ்எஸ்ஸால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள்தான் தற்போது நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக உள்ளனர். நம்முடைய கல்விமுறை அவர்களது கைகளுக்கு முழுமையாக சென்றுவிட்டால் இந்த நாடே அழிந்துவிடும்.
சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத்
நாட்டின் முக்கியமான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கொள்கையோ நோக்கமோ பாஜக அரசுக்கு கிடையாது. மணிப்பூர் போன்ற இன்றையப் பிரச்சனைகளை மக்கள் பேசக் கூடாது என்பதற்காக தான் கடந்தகால ஒளரங்கசீப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., அரவிந்த் சாவந்த்
ஏக்நாத் ஷிண்டே துரோகம் செய்து ஆட்சி அமைத்தார் என குணால் கம்ரா சொன்னதில் எந்த அவதூறும் இல்லை. அவர் சொன்னதுதான் உண்மை. இந்த நாட்டில் ஜனநாயகம் இருப்பதாக சொல்லும் நாம் இந்த விமர்சனத்தை ஏற்றுதான் ஆக வேண்டும்.
ஆர்ஜேடி எம்.பி., சஞ்சய்
இப்தார் விருந்து என்பது சகோதரத்துவத்தைப் பரப்பும் ஒரு வழி ஆகும். ஆனால் இப்தார் விருந்தை கூட முஸ்லிம் மக்களுடன் இணைந்து நடத்த முடியாமல் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திணறி வருகிறார். இது அவரது இழிவான செயல்பாட்டை குறிக்கிறது.