tamilnadu

img

தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

தமிழ்நாட்டில் 97.37 லட்சம்  வாக்காளர்கள் நீக்கம்!

சென்னை, டிச. 19 -  தமிழகத்தில் நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 14 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR)  நடைபெற்று முடிந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெள்ளிக் கிழமை (டிச.19) அன்று வெளியிட்டனர். இதில், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 26 லட்சம் வாக்காளர்கள் இறந்து போனவர்கள், 66 லட்சம் பேர்  இடம் பெயர்ந்தவர்கள் என்றும், ஏனை யோர் இரட்டை பதிவு மற்றும் அடை யாளம் காண முடியாதவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அதே நேரத்தில், அந்தந்த வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமையன்று பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். அதிக நீக்கம் சென்னை முதலிடம்! மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு  வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.  எஸ்.ஐ.ஆர் பணிக்கு முன் 40 லட்சத்து 4 ஆயிரத்து 694 பேர் இருந்த நிலையில், இப்போது 25 லட்சத்து 79 ஆயிரத்து 676 பேர் மட்டுமே உள்ளனர். அடுத்தடுத்த இடங் களில்- செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளர்களும், கோவை மாவட்டத்தில் 6,50,590 வாக்காளர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6,19,777 வாக்காளர்களும், திருப்பூரில், 5,63,785 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். இதேபோல மதுரை - 3,80,474, திருச்சிராப்பள்ளி - 3,31,787, திண்டுக்கல் - 3,24,914, காஞ்சிபுரம் - 2,74,274, திரு வண்ணாமலை - 2,51,162, கடலூர் - 2,46,818, நெல்லை - 2,16,966, தஞ்சாவூர் - 2,06,503, விருதுநகர் - 1,89,964, விழுப்புரம் - 1,82,865, கிருஷ்ணகிரி - 1,74,549, சிவ கங்கை - 1,50,828, ராணிப்பேட்டை - 1,45,157, புதுக்கோட்டை - 1,39,587, தேனி - 1,25,739, தருமபுரி - 81,515, கரூர் - 79,690, நாகப்பட்டினம் - 57,338, அரியலூர் - 24,368,  நாமக்கல் - 1,93,000 என வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆட்சேபணை தெரிவிக்கும் வாய்ப்பு வரைவு பட்டியலில் தவறுதலாக நீக்கப்பட்டதாக கருதுபவர்கள் ஜனவரி 18 வரை ஆட்சேபணை தெரிவிக்கலாம்.  இடம் மாறியவர்கள் படிவம் 8-ஐயும், புதிதாக சேர்பவர்கள்படிவம் 6ஐயும் பூர்த்தி  செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்கா ளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள லாம். பெயர் சேர்ப்பதற்கும் திருத்தங் களுக்கும் மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு வாக்காளர் இறுதி பட்டியல் 2026 பிப்ரவரியில் வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும் போட்டியிடவும் முடியும்.