அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை மாநிலங்களவையில் சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் இடித்துரை
புதுதில்லி இன்சூரன்ஸ் துறையில் அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நுழைவது மக்களுக்கு சேவை செய்வதற்காக அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் பேசினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் போது, மாநிலங்களவையில் இன்சூ ரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக் காக இன்சூரன்ஸ் திருத்தச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டு அதன் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற ஜான் பிரிட்டாஸ் எம்.பி., மேலும் பேசுகையில்,”இந்த சட்ட முன்வடிவைக் கொண்டுவருவதன் நோக்கம், மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் உலக ளாவிய சிறந்த நடைமுறைகளை ஈர்ப்பது என்ப தாகும். இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஆனால் இது தொடர்பாக ஓராண்டுக்கு முன் அமெரிக்காவில் என்ன நடந்தது என்கிற ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வை இந்த அர சாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். அமெரிக்க இன்சூரன்ஸ் தலைவர் கொலை ஏன்? அமெரிக்காவில் இயங்கிவந்த மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர், பிரையன் தாம்ப்சன் என்பவர் மிகக்கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் எவ்விதமான வன்முறைக்கும் வக்காலத்து வாங்கவில்லை. அவர் ஏன் கொல்லப்பட்டார்? இன்சூரன்ஸ் கோரியவர்களுக்கு அவர்க ளுக்குத் தர வேண்டிய தொகையை தாமதப் படுத்தியதால், மறுத்ததால், உரிமத்தொகை களைக் கொடுக்காமல் தவிர்த்ததால் அவர் கொல்லப்பட்டார். இதுதான் அங்கே இயங்கி டும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது மக்கள் வைத்திடும் குற்றச்சாட்டு ஆகும். இவ்வாறு கொடூரமான கொலை செய்யக்கூடிய அள வுக்கு உணர்வுகள் ஏன் எழுந்தன? ஏனென்றால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது பரவலான வெறுப்பு இருந்தது. தலைவர் அவர்களே, அத்தகைய நிறுவ னங்களைத்தான் ஆட்சியாளர்கள் இந்தியா விற்குள் கொண்டுவர விரும்புகிறார்கள். 74% முதலீடே முழுமையடைவில்லை இன்சூரன்ஸ் துறையை நூறு சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடு வதால் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி எதுவும் நடக்கப்போவதில்லை. ரூபாய்க்கு என்ன ஆனது? மூலதனம் வெளியேறுவதால் ரூபாய் மதிப்பு 91 ஆகச் சரிந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு இல்லை. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறிக்கொண்டி ருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள உங்கள் நண்பர்கள் கூட வேறு இடங்களில் முதலீடு செய்கிறார்கள். இந்த இன்சூரன்ஸ் துறைத் திறப்பினால் வெளிநாட்டு நிறுவனங்கள் வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் சொல்வது தவறு என்பதை நான் நிரூபிப்பேன். நீங்கள் 74 சதவீத அந்நிய நேரடி முத லீட்டிற்கு அனுமதி அளித்தீர்கள். என்ன நடந்தது? 32.67 சதவீதம் கூட முழு மையாகவில்லை. அதாவது, 74 சதவீதம் இன்னும் முதலீடு செய்யப்படாமல் உள்ளது. ஒன்பது வெளிநாட்டு நிறுவனங்கள் வெளி யேறிவிட்டன. 9 நிறுவனங்கள் வெளியேறிவிட்டன மொத்தம் ஒன்பது வெளிநாட்டு இன்சூர ன்ஸ் நிறுவனங்கள் ஏற்கெனவே இந்திய இன்சூரன்ஸ் சந்தையிலிருந்து வெளியேறி, நாட்டில் உள்ள பாலிசிதாரர்களைக் கைவிட்டு விட்டன என்பது உங்களுக்குத் தெரியாதா? மேலும், என்ன நடக்கும்? ஒருவேளை 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு அனு மதிக்கப்பட்டால், அந்த வெளிநாட்டுப் பங்காளி கள் கூட்டு முயற்சிகளிலிருந்து விலகி, தாங்களா கவே தொழிலை நடத்த முடிவு செய்தால், கணிசமான அந்நிய நேரடி முதலீடு கொண்ட உள்நாட்டு நிறுவனங்கள் மீது அது ஒரு பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியும். இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தி ற்காகவே வருகின்றன. அவை தொண்டு செய்ய வரவில்லை. இந்த வார்த்தையைப் பயன்படுத்தி, கிராமப்புறங்களில் ஊடுருவல் ஏற்படும் என்று கூறி, நீங்கள் ஒரு மாயையை உருவாக்குகிறீர்கள். இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் கிராமப்புற மக்களை நாடாமல், பெரிய கணக்குகளை நோக்கியே செல்லும். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், நடக்கப் போவது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. எனவே இந்த சட்டமுன்வு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன்” என அவர் பேசினார். (ந.நி.)
