tamilnadu

img

கர்நாடகாவில் 2,809 விவசாயிகள் தற்கொலை 11 மாதங்களில் 377 மரணம்

கர்நாடகாவில் 2,809 விவசாயிகள் தற்கொலை  11 மாதங்களில்  377 மரணம்

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில், 2,809 விவசா யிகள் தற்கொலை செய்து கொண்டனர் என அம்மாநில காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்டு ள்ளது. 2023-24 ஆம் ஆண்டில், 1,254 விவசாயிகளும், 2024-25ஆம் ஆண்டில் 1,178 விவசாயிகளும், இந்த ஆண்டு 11 மாதங்களில் 377 விவசாயிகளும் என கடந்த 3 ஆண்டுகளில் 2.809 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என சட்டமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் படி, விவசாயிகள் தற்கொலையில் நாட்டில் இரண்டாவது இடத்தில் கர்நாட கம்  உள்ளது. பல விவசாய குடும்பங்க ளுக்கு இன்னும் அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்கவில்லை. அதிக உற்பத்திச் செலவுகள் மற்றும் விளைபொருட்களின் குறைந்த விலை காரணமாகப் போரா டும் விவசாயிகளுக்கு உதவ காங்கிரஸ் அரசு திறம்பட தலையிடத் தவறியது விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளு கிறது என விவசாயிகள் தெரி வித்துள்ளனர்.