உதயம் நிறுவனத்தையும் சுருட்டிய அம்பானி
தமிழ்நாடு உள்ளிட்ட தென் ்னிந்திய மாநிலங்களில் 30 ஆண்டுக ளுக்கும் மேலாக பருப்பு வகைகள், அரிசி, மசாலாப் பொருட்கள், தின்பண் டங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் கோலோச்சி வரும் “உதயம்” உணவுப் பொருள்கள் (உதயம்ஸ் அக்ரோ புட்ஸ் - தமிழ்நாடு) தயாரிப்பு நிறுவனத்தை பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான தொழிலதிபரான முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். அம்பானிக்குச் சொந்தமான ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நுகர்வோர் பொருட்கள் பிரிவான ரிலை யன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் உதயம் அக்ரோ புட்ஸ் நிறு வனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தின்படி உதயம்ஸ் அக்ரோ புட்ஸ் நிறுவனத்தில் ரிலையன்ஸ் பெரும் பான்மையான பங்குகளை வைத்தி ருக்கும். அதேநேரம், பழைய உரிமையா ளர்கள் ஒரு சிறிய பங்கைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.
