tamilnadu

மோடி அரசே, ‘விபி ஜி ராம் ஜி’ மசோதாவை திரும்பப் பெறு!

மோடி அரசே, ‘விபி ஜி ராம் ஜி’  மசோதாவை திரும்பப் பெறு! டிச. 24 - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை, டிச. 19 - 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் வகையில், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள ‘விபி ஜி ராம் ஜி’ சட்ட முன்வடிவைக் கண்டித்தும், அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 24 அன்று மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  ம.தி.மு.க., வி.சி.க., ம.ம.க. த.வா.க., கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகளை உள்ளட க்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஏழைகளுக்கு எதிராக நாசகர சதிச்செயல்  “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்புச் சட்டத்தைத் சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து, திட்டத்தை முடக்குவது, வேலை நாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, ‘கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு’ என்ற அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியை திணிப்பது என சட்டத்தை திருத்தியும் - நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து... 1ஆம் பக்கத் தொடர்ச்சி ... கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் அடிக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நாசகர சதிச் செயலையும் அதற்கு ஒத்து ஊதி தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.கவை கண்டித்தும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் 24.12.2025 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில், தலைநகர் சென்னையிலும் - மாநிலத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைவாய்ப்பினால் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும். பாசிச பாஜக-வுக்குத் துணைபோகும் அதிமுக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – மாநில நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சியைச் சார்ந்த அனைத்து கூட்டணி அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில், மாவட்ட கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசையும் - ஒத்து ஊதும் அ.தி.மு.க.வைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திட வேண்டும்.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.