முட்டை சாப்பிடுவதால் புற்றுநோய் அபாயம் இருப்பதாக வெளியான கூற்றுகள், அறிவியல் பூர்வமாக ஆதாரமற்றவை என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரு பிரபல நிறுவனத்தால் விற்கப்படும் முட்டைகளில் AOZ (அமினோ-ஆக்ஸாசோலிடினோன்) தடயங்கள் இருப்பதாகவும், இது தடைசெய்யப்பட்ட நைட்ரோஃபுரான் (Nitrofuran) என்ற ஆண்டிபயோடிக் மருந்துடன் தொடர்புடையது என்றும், இதனால் முட்டைகள் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியானது.
இந்த நிலையில் இதற்கு விளக்கமளிக்கும் வகையில், இந்தியாவில் விற்கப்படும் முட்டைகள் பாதுகாப்பானவை; முட்டை சாப்பிடுவதால் புற்றுநோய் அபாயம் இருப்பதாக வெளியான கூற்றுகள், அறிவியல் பூர்வமாக ஆதாரமற்றவை; இதுபோன்ற கூற்றுகள், நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சத்தை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளது.
