மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில், MGNREGA திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட VB-G RAM G மசோதா, அணுசக்தித் துறையில் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் SHANTHI மசோதா, காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் சப்கா பீமா சப்கி ரக்ஷா உள்ளிட்ட 7 மசோதாக்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
