tamilnadu

img

பாரதியையும் பெரியாரையும் மோத விடலாமா? - கே.வி.

பாரதியையும் பெரியாரையும் மோத விடலாமா?

இந்திய நாட்டின் வளத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் அம்பானிக்கும் அதானிக்கும் இன்னும் சிலருக்கும் அள்ளி அள்ளிக் கொடுப்பதற்காகவே நிதி அமைச்சராக ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் பெரியாரைப் பற்றி பேசியதை தமிழகம் மறந்திருக்காது. அதைவிட தனக்கே உரிய பாணியில் திருவாளர் சீமான் அவர்கள் பாரதியின் அருள் இறங்கி உணர்ச்சிப் பிழம்பாய் பெரியாருக்கு எதிராக சாமியாடி இருக்கிறார்.  யார் குரலை யார் எதிரொலிக்கிறார்கள் என்பது மிக முக்கியம். அதற்காகவே மகா கவி பாரதியை பற்றி பாகிஸ்தானில் கூட பேசு வேன் என்று முழங்கு முழங்கு என்று முழங்கி  இருக்கிறார். திருவாளர்சீமானின் நோக்கம்  தெளிவானது. பாரதிக்கு பின்னால் மறைந்து  கொண்டு பெரியாரை தூற்றுவது என்பது மட்டும் தான். என்ன சொல்லுவது அவரு டைய தமிழ்த் தேசியம் அவ்வளவுதான். பகுத்தறிவுத் தீபத்தை தன் தமிழ் நெருப்பால்  பற்ற வைத்த பாரதியின் தாசன்- பாரதி தாசன் பாரதியின் உள்ளத்தை பற்றிப் பாட லாக வடித்திருக்கிறாரே.  சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று  பாதியை நாடு மறந்தால் – மற்ற  பாதி துலங்குவதில்லை  சாதி களைந்திட்ட ஏரி - நல்ல  தண்டமிழ் நீரினை ஏற்கும்  சாதிப்பிணிப்பற்ற தோளே- நல்ல  தண்டமிழ் வாளினைத் தூக்கும் !. என்றுரைப்பார் என்னிடத்தில் - அந்த  இன்ப உரைகளென் காதில் இன்றும் மறைந்திடவில்லை - நான்  இன்றும் இருப்பதனாலே !.. பன்னும் நம் பாரதியாரின் - நல்ல  பச்சை அன்புள்ளத்தினின்று  நன்று பிறந்த இப்பேச்சு - நம்  நற்றமிழர்க்கெழில் மூச்சு!.. இக்கருத்தை நிராகரிக்க முடியுமா?... சாதிய கட்டமைப்பையும். பெண் அடி மைத்தனத்தையும் விட்டுவிட்டு இந்துத்து வாவால் உயிர் வாழ முடியாது. ஆனால் பாரதி சாதியத்திற்கு எதிராக பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக சங்கநாதம் முழங்கியவன். இந்த விஷயத்தில் தமிழ் நாட்டின் முற்போக்காளர்களுக்கு இரண்டு கருத்துக்கள் இருக்க வாய்ப்பே இல்லை.  இன்னொன்று, காலத்தையும் கருத்தை யும் பிரித்து அணுகுவது சரியான அணுகு முறை இல்லை. எந்த சித்தாந்தத்தின் வர லாற்றை படிக்கும் போதும் ஒரு சங்குச் சூரு ளுக்குள் பயணம் செய்வதை போல் ஒருவன்  அதை படிக்க வேண்டும் என்கிறார் மாமேதை  லெனின். ஆகவே வரலாற்றின் சில குறிப் பிட்ட சில இடுக்குகளுக்குள் மாட்டிக் கொண்டு ஆளுமைகளை மதிப்பீடு செய்வது சரியல்லவே.  இதை இங்கு கூற வேண்டிய அவசியம் என்ன ?..வேறொன்றும் இலலை .. சீமா னுக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் பாரதியை பிடித்து சனாதன கொட்டடியில் கட்டி வைக்க முற்படுவது எந்த வகையில் நியாயம்?...  பாரதியையும் பெரியாரையும் மோத விட்டு கைதட்டி வேடிக்கை பார்ப்பது சங்பரி வாரங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அதனால் தான் என்னவோ குருமூர்த்தி அவர்கள் “பாரதியைப் பற்றி சீமான் கேட்க  வேண்டிய அபாரமான உரை. பாரதியாரை ஏற்ற தமிழ்த் தேசியம் பாரதி பாடிய சேத மில்லாத ஹிந்துஸ்தானத்தின் அங்கம். தமிழைத் திருடிய திமுகவுக்கு பெரும் சவால் சீமான் “ என்று சீமானை பாராட்டி  பதிவிட்டு இருக்கிறார்.அவர் பாரதியை  புகழ்ந்ததற்காகவா பாராட்டி இருப்பார்?..  நிச்சயம் இல்லை... அவர் எதற்காக பாராட்டி னார் என்பதற்கு விளக்கம் தேவையில்லை.. சங்பரிவாரத்தின் சதிவலைக்குள் சீமான் மாட்டிக்கொள்ளலாம்..  ஆனால் தமிழ்நாட்டின் முற்போக்கா ளர்கள் மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.பீகா ருக்கு பிறகு தமிழ்நாடு எங்கள் குறி என்று  கொக்கரித்துக் கொண்டிருக்கும் சங்பரிவார்  கூட்டத்தை வீழ்த்துவதற்கு பெரியாரும் பயன்படுவார் பாரதியும் பயன்படுவார் எனவே வாளும் கேடயுமாக பெரியாரையும் பாரதியையும் முற்போக்கு முகாம் கையில் ஏந்த வேண்டிய இந்தக் காலச் சூழலில் இரு வரையும் குருமூர்த்திகள் கையில் ஒப்படைப்  பது சரி அல்லவே... சிந்திப்போம்..