சென்னை, மார்ச் 26- கொரோனா வைரஸ் தொற்றால் வியாபாரம் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சிறுவியாபாரிகளுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண உத வியை உடனே வழங்க வேண்டும் என சென்னை நகர சிறு வியா பாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை நகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு கடைவியாபாரிகள் தலைமுறை தலை முறையாக வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வரு கின்றனர். குறிப்பாக தமிழ கத்தின் தலைநகரின் என்எஸ்சி போஸ் சாலை , ரட்டன் பஜார் சாலை, பிரேசர் பிரிட்ஜ் சாலை, ஈவினிங்பஜார், வடக்குகோட்டை சாலை, முத்துசாமி சாலை, பூக்கடை பேருந்து நிலையம் உள் பகுதி, பர்மாபஜார், மூர்மார் கெட், ரிச்சித் தெரு ரேடியோ மார்கெட், தி.நகர், திருவல்லிக் கேணி, மைலாப்பூர், அடை யாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், மாம்பலம், கே.கே.நகர், வடபழனி, போரூர், கோடம்பாக் கம், அம்பத்துர், ஆவடி, வண்ணா ரப்பேட்டை, திருவெற்றியூர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான சிறு வியாபாரிகள் சுயவேலை வாய்ப்பு அடிப்படையில் சமூ கத்திற்கு தேவையான பொருட் களை விற்பனை செய்து வரு கிறார்கள். சிறிய வகை ஆயத்த ஆடை கள், துணிவகைகள், வீட்டு உப யோகப் பொருட்கள் , மின்சாதனப் பொருட்கள், தேனீகடைகள், உணவு கடைகள் விற்பனை செய் பவர்கள் தற்போது கடுமையாக பாதிப்புக்குள்ளாகிவிட்டனர். இதுபோன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களான திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், சேலம், திருநெல்வேலி போன்ற நகரங்களில் சுமார் 5 லட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள னர். தற்போதைய நிலையில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக்காரண மாக அரசு வேண்டுகோளின் படி சிறுகடைகள் அடைக் கப்பட்டு விட்டன. 21 நாட்களுக்கு யாரும் தொழில் செய்யமுடியாது இத னால் இந்த தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தரவியாபாரிகள் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ 2000 நிவார ணம் அறிவித்துள்ளது வரவேற்க தக்கது தான். ஆனால் இது போதாது. அன்றாடம் காய்ச்சி யான இம்மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குமாறு தமிழக முதலமைச்சரை சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. சாலையோர சிறுகடை வியா பாரிகள் குடும்பத்திற்கு ரூ.10 ஆயி ரம் வழங்க வேண்டும், இதை உள்துறையும் , தமிழக முதல்வ ரும் பரிசிலனை செய்து மாநக ராட்சி நிர்வாகத்தின் மூலம் உரிய வர்களின் வங்கிக்கணக்கில் உடன டியாக செலுத்தவேண்டும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.அபுதாகீர் கேட்டுக்கொண் டுள்ளார்.