தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை தியாகராய நகர் தொகுதியில், அதிமுகவின் 13,000 ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறி, அந்த கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தகவல் வழங்கியுள்ளது
