court

img

தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் - காங்கிரஸ் வழக்கு பதிவு

புதுதில்லி,டிசம்பர்.24- தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் திடீரென தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இந்த திருத்தத்தின்படி சந்தேகத்தின் பேரில் மனுதாரர் கேட்கும் தேர்தல் ஆவணங்களைப் பொதுவெளியில் தேர்தல் ஆணையம் வெளியிடத் தேவையில்லை எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அந்தவகையில் அரசியல் அமைப்பு சட்டப்படி செயல்படும் தேர்தல் ஆணையமானது மக்களின் கருத்துகளைக் கேட்காமல் முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.