குழித்துறையில் சாரணர் பேரணி
குழித்துறை , பிப். 26- உலகளவில் சாரண சாரணிய இயக்கத்தை நிறுவிய பேடன் பவுல் பிறந்த நாளை, சாரணர் சாரணிய இயக்க நினைவு நாளாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு, குமரி மாவட்டம், திருவட்டார் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட 50 பள்ளிகளிலிருந்து 1300க்கும் மேற்பட்ட சாரணர், சாரணிய மாணவர்கள் பங்கேற்ற பேரணியானது குழித்துறை வாபுபலி பொருட்காட்சி மைதானத்திலிருந்து துவங்கியது. இயக்கத்தின் தலைவர் பி.கெ சிந்து குமார் தலைமையில் காவல் சார்பு ஆய்வாளர் பரமேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் சிறப்பிடம் பெற்ற பள்ளிகளுக்கு அருணோதய இன்டர்நேஷனல் உண்டு உறைவிட மஞ்சாலுமூடு பள்ளியின் தாளாளர் சதீஷ்குமார் விருது வழங்கி பாராட்டினார்.. சாரணர் ஆணையர் ஜோஸ் பென்சிகர் கேம்பூரி, ஜாம்பூரி நிகழ்ச்சியின் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.
