சென்னை, அக். 14 - இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், திருச் செந்தூர் கோயில் மற்றும் அதன் உப கோயில் கிருஷ்ணாபுரத் தில் 5.81 கோடி ரூபாய் மதிப்பீட் டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது.
அதேபோல், வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி, புதிதாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, சரவணப் பொய்கை யில் செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதை உடன் கூடிய அழகிய பூங்காவாக புனர மைக்கும் பணி ஆகிய 4 புதிய திட்டப் பணிகள் நடைபெற உள்ளன.
இப்பணிகளுக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் திங்க ளன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும், 68.36 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி, முடி காணிக்கை மண்டபம், சுகாதார வளாகங்கள், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் ஆகிய 4 முடிவுற்ற பணிகளைக் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மக்களவை உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.