சென்னை, மே 13-பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் கீதா தம்பதியினரின் மகள் 7ஆம் வகுப்பு படிக்கும் இலக்கியா. மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ள ஐஜேகே நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் சாதாரண, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இலக்கியா தனது விடாமுயற்சியின் மூலம் இப்பெரும் சாதனையை நிகழ்த்தியிருக் கிறார். 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான கராத்தே போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள இலக்கியாவுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் ரூ. 3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைக்கவும் அவருக்கான உதவிகள் செய்து தரப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.