திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
திருவள்ளுவர் தினத்தையொட்டி புதுச்சேரி பேரூந்துநிலையம் எதிரே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு சட்டப்பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினார்கள்.
வேலூர் விஐடி பல்கலைக்கழ கத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கலிட்டு பொங்கல் விழா புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது.காந்தி வீதியில் நடைபெற்ற விழாவிற்கு சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க சண்டே மார்க்கெட் சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.சிஐடியு மாநில பொது செயலாளர் சீனுவாசன், சங்கத்தின் நிர்வாகிகள் வடிவேல், அழகராஜ்,வீர மணிகண்டன், சேவியர், கிறிஸ்தோபர்,ராமசாமி, அன்பழகன் உட்பட திரளான வியாபாரிகள் கலந்து சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஒன்றியம், அருங்குணம் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வியாழன் அன்று (ஜன.15) சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ம.திலகராஜ் தலைமையேற்று நடத்தினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வட்டார செயலாளர் வ.அண்ணாமலை மற்றும் கிளை தலைவர் வெங்கடேஷ், கிளை பொருளாளர் ரா.மணிகண்டன், ராஜேஷ், நித்திஷ், சுந்தர்ராஜ் , நா.தங்கமணி, ராமச்சந்திரன், கௌரி, லலிதா ஆகிய நிர்வாகிகள் முன்னின்று நடத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாட்டுப்பொங்கலை கிராமங்கள் தோறும் பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சங்கராபுரம் நகரப் பகுதியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, மாடுகளுக்கான புதிய கயிறு, சலங்கை உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.இதனால், நகரின் முக்கிய சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி சத்யா நகர் கிளை சார்பில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டிகளை மாநில பொருளாளர் தீ. சந்துரு தொடங்கி வைத்தார். தென்சென்னை மாவட்ட பொருளாளர் சிந்தன், பகுதி தலைவர் சுந்தர்ராஜ், செயலாளர் ராஜ்குமார், துணைத் தலைவர் நிரஞ்சனா, துணைச் செயலாளர் அபினேஷ், கிளைத் தலைவர் பாலாஜி, செயலாளர் வினோத் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாப்பூர் பகுதி, 171 வது வட்டம் வள்ளீஸ்வரன் தோட்டம் கிளை சார்பில் சமத்துவப் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
பல்லாவரம் கன்டோன்மெண்ட் வாரச்சந்தை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (ஜன.16) பொங்கல் விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் ஒய்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கன்டோன்மெண்ட் போர்டு செயல் அலுவலர் ஏ.வினோத் விக்னேஷ்வரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சங்க ஆலோசகர் எம்.சி.பிரபாகரன், செயலாளர் ஜி.பூமிநாதன், துணைத்தலைவர் கே.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிஎஸ்ஐ தூய தோமா ஆலயத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழனன்று நடைபெற்றது. விழாவிற்கு ஆலயத்தின் ஆயர் ஜி. அருண் வெஸ்லி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆயர். செல்லதுரை, ஆயர். ஸ்டீபன் ராஜ், ஊழியர் ஏ. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
