சென்னை, ஜூலை 2 - தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக் கைக்கு எதிராக சட்டப்பேர வையில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என்று திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் வலியுறுத்தினார். பேரவையில் செவ்வா யன்று (ஜூலை 2) பள்ளிக் கல்வி, உயர்கல்வித் துறை மானியத்தின் மீதான விவா தம் நடைபெற்றது. அப்போது மேற்கண்ட கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங் கோட்டையன் கூறுகையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பல ஆண்டு களாக பின்பற்றப்பட்டு வருகிறது. வெளிநாடு, பிற மாநில மொழிகள் கற்பதை அரசு தடுக்கவில்லை. எனவே, 3 மொழிகளை கற்க வேண்டும் என்று கட்டாயப்ப டுத்தக் கூடாது. 23-1-2968ல் சட்டமன்றத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக, இருமொழிக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. எனவே, இவற்றை யெல்லாம் விளக்கி முதல மைச்சர் பிரதமருக்கு 26-6-2019 அன்று கடிதம் எழுதி யுள்ளர். எனவே, இரு மொழிக் கொள்கை என்பது தான் அரசின் நிலைப்பாடு என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய சுரேஷ்ராஜன், ஜாக்டோ- ஜியோ போராட் டத்தில் பங்கேற்ற ஆசிரி யர்கள் மீதான நடவடிக்கை களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.