திருவள்ளூர், ஆக.8- பூந்தமல்லி பகுதியில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு இலவச குடிமனை மற்றும் பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் பூந்தமல்லி பகுதி மாநாடு மாவட்டச் செயலாளர் எஸ். எம்.அனீப் தலைமை யில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ.அப்சல் அகமது, சிபிஎம் ஒன்றிய செயலாளர் வி.அறிவழகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.“என்ஐஏ சட்டம்” யாருக்கு எதிரானது என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் டி.லட்சுமணன் சிறப்புரை யாற்றினார். ‘நிழல் இராணுவங்கள்’ என்ற புத்தகத்தை தமுஎகச மாவட்ட துணைச் செயலாளர் எஸ். மோசஸ்பிரபு அறிமுகம் செய்தார்.
புதிய நிர்வாகிகள்\
பகுதித் தலைவராக எஸ். மோசஸ்பிரபு, செயலாளராக இக்பால், பொருளாளராக ராஜ சேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் சாலை, குடிநீர் போன்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், அரசு சலுகைகள் வழங்க வேண்டும், ஆரம்ப கல்வி கூடம் அமைக்கப்பட வேண்டும், வறுமையில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு தொழில் தொடங்க வங்கிக் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.